போலீசார் நடவடிக்கை எடுக்க ேவண்டும்

பஸ்கள் நிறுத்துவதை கண்காணித்து போலீசார் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-04-30 18:25 GMT

வாலாஜாவில் வேலூர் பஸ் நிறுத்தம் பகுதியில் 2 சாலைகளின் சந்திப்பு இடம் உள்ளது. பஸ் நிறுத்தம் உள்ள பகுதியில் சென்னை, காஞ்சீபுரம் பகுதியில் இருந்து வரும் தனியார் பஸ்கள் அனைத்தும் பஸ் நிறுத்தம் பகுதியில் நிற்காமல் முன்னதாகவே உள்ள இந்த 2 சாலைகளின் சந்திப்பில் நிறுத்தப்படுகின்றன. இதனால் உள்ளே இருந்து வெளியே செல்லவும் வெளியே இருந்து உள்ளே செல்லவும் வாகனங்கள் திணறுகின்றன. போக்குவரத்துப் போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்