போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீசாரை நியமிக்க வேண்டும்

திருவாரூர் வாளவாய்க்கால் ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீசாரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-08-08 18:45 GMT

திருவாரூர் வாளவாய்க்கால் ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீசாரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாளவாய்க்கால் ரவுண்டானா

திருவாரூர் நகர் நாகை பைபாஸ் சாலையில் வாளவாய்க்கால் ரவுண்டானா அமைந்துள்ளது. இந்த இடம் 4 வழி பிரதான சாலை சந்திப்பு பகுதியாக அமைந்துள்ளது. நாகை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை, திருத்துறைப்பூண்டி, முத்துபேட்டை பகுதிக்கு செல்லும் சாலை,திருவாரூர் நகர் கடைவீதி செல்லும் சாலைகளின் சந்திப்பு என்பதால் எந்த நேரமும் வாகன போக்குவரத்து நெருக்கடி மிகுந்த பகுதியாக இருந்து வருகிறது.

இதில் காலை நேரங்களில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள், அரசு அலுவலர்கள் என வாகன போக்குவரத்து மிகுதியாக இருந்து வருவது வழக்கம். இதேபோல் மாலை நேரங்களில் வீட்டிற்கு திரும்பும்போதும் இதே நிலை தான் உள்ளது.

தாறுமாறாக செல்லும் வாகனங்கள்

இந்த ரவுண்டானாவில் போக்குவரத்து சிக்னல் என்பது இல்லாமல் உள்ளது. இதனால் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்கள் தாறுமாறாக சென்று வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.. இதன் காரணமாக அடிக்கடி போக்குவரத்து ஸ்தம்பித்து அவசர பணிக்காக செல்பவர்கள், மருத்துவ சிகிச்சை செல்பவர்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே இந்த ரவுண்டானாவில் காலை, மாலை இரு வேளைகளிலும் போக்குவரத்தினை சீரமைத்திட போலீசார் நியமிக்க வேண்டும். மேலும் போக்குவரத்து சிக்னல் விளக்கு அமைத்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்