விநாயகர் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு
செங்கோட்டை பகுதியில் விநாயகர் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு
செங்கோட்டை:
செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. செங்கோட்டை நகரில் மட்டும் இந்த ஆண்டு 37 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. பள்ளிமேட்டு பகுதி, காமாட்சி அம்மன் கோவில், வீரகேரள விநாயகர் கோவில், வண்டிப்பேட்டை முக்கு, பூதத்தார் கோவில், காளியம்மன் கோவில் திடல், ஓம்காளி திடல், வம்பளந்தான் முக்கு, செல்வ விநாயகர் கோவில், எஸ்.ஆர்.கே.தெரு, அப்பாமாடசாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வழிபாடு நடைபெறுகிறது.
செங்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் 14 சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று முதல் இரவு பகலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.