ஸ்ரீவில்லிபுத்தூர்
குடியரசு தின விழாவை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்ரீவில்லிபுத்தூர் ெரயில்வே நிலையத்தில் போலீசார் வெடிகுண்டு சோதனை நடத்தினர். அப்போது தண்டவாளத்தில் நாசவேலை ஏதும் நடந்துள்ளதா என போலீசார் ஆய்வு செய்தனர்.மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆண்டாள் கோவில் தங்க கோபுரத்தில் நான்கு புறங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.