காவல்துறை ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம்
காவல்துறை ஓய்வு பெற்ற அலுவலர்கள் நலச்சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை ஓய்வு பெற்ற அலுவலர்கள் நலச்சங்க பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் மாரிமுத்து தலைமையில் நடைபெற்றது.
அமைப்பு செயலாளர் கார்த்திகேயன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
பொருளாளர் ராமசாமி நிதி நிலை அறிக்கை வாசித்தார். கூட்டத்தில் ராமநாதன், பற்குணம், மணிமாறன், ராமசாமி, போஸ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
இதில் புதிய கட்டிட விரிவாக்க பணிகளை தொடங்க ஆலோசிக்கப்பட்டது. முடிவில் இருளாண்டி நன்றி கூறினார்.