திருச்சியில் 2 பேர் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை

கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, திருச்சியில் 2 பேர் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் சிம்கார்டுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-11-02 19:51 GMT

கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, திருச்சியில் 2 பேர் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் சிம்கார்டுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை கார் வெடிப்பு

கோவை உக்கடம் பகுதியில் கடந்த 23-ந் தேதி கார் வெடித்த சம்பவத்தில் ஜமேஷாமுபின் என்பவர் உயிரிழந்தார். விசாரணையில் அவர் பல்வேறு பயங்கரவாத செயல்களை அரங்கேற்ற திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக மேலும் பலரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் கோவை சம்பவம் எதிரொலியாக ஐ.எஸ். உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் யாரேனும் தொடர்பில் உள்ளனரா?. தமிழகம் முழுவதும் போலீசார் கண்காணித்து அந்த இடங்களில் திடீர் சோதனையும் நடத்தி வருகிறார்கள்.

செல்போன் பறிமுதல்

இந்தநிலையில் திருச்சி விமானநிலையம் வயர்லெஸ்ரோடு ஸ்டார்நகரில் வசித்து வரும் அப்துல்முத்தலிப் (வயது 35) என்பவர் வீட்டில் கே.கே.நகர் உதவி கமிஷனர் சுரேஷ்குமார், இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நேற்று காலை அதிரடி சோதனை நடத்தினார்கள். மேலும் அவரது வீட்டில் சந்தேகப்படும்படி ஏதேனும் பொருட்கள் இருக்கிறதா? என காலை 7 மணி முதல் 8.30 மணி வரை சுமார் 1½ மணிநேரமாக அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனைக்கு பிறகு, அவரது செல்போன் மற்றும் சிம்கார்டுகளை போலீசார் பறிமுதல் செய்து எடுத்து சென்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் ஐ.எஸ். உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டு இருந்ததாகவும், இது தொடர்பாக ஏற்கனவே என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்தே அவரது வீட்டில் நேற்று சோதனை நடத்தப்பட்டுள்ளது.

வீட்டில் சோதனை

இதேபோல் திருச்சி எடமலைப்பட்டிபுதூர் சீனிவாசநகரில் வசித்து வரும் ஜூபேர்அகமது (30) என்பவர் வீட்டிலும் நேற்று காலை போலீசார் சோதனை நடத்தினார்கள். இவர் உடற்பயிற்சிகூட பயிற்சியாளராக உள்ளார். இவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் சந்தேகப்படும்படியான பொருட்கள் எதுவும் சிக்கவில்லை.

மேலும், ஜூபேர்அகமது மதுரைமெயின்ரோடு சக்திவேல்காலனியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார். அங்கேயும் போலீசார் சோதனை நடத்தினார்கள். இவர், கடந்த 2019-ம் ஆண்டு என்.ஐ.ஏ. அதிகாரிகளால் விசாரிக்கப்பட்ட நபரின் உறவினர் என்றும் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்