ரேஷன் கடைகளில் போலீசார் சோதனை

பழனியில் உள்ள ரேஷன் கடைகளில் போலீசார் சோதனை செய்தனர்.

Update: 2023-06-11 19:00 GMT

திண்டுக்கல் மாவட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்கள் இருப்பு சரியாக உள்ளதா?, பொதுமக்களுக்கு முறையாக பொருட்கள் வழங்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்யும்படி குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு, போலீஸ் சூப்பிரண்டு சினேகா பிரியா உத்தரவிட்டார். அதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு பாலசுப்பிரமணி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கீதா, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் பழனி பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ரேஷன் கடைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை ஆகியவை குறித்த ஆவணங்களை போலீசார் சரிபார்த்தனர். மேலும் இருப்பில் உள்ள பொருட்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு முறையாக வழங்கப்படுகிறதா? என்றும் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது பழனி வட்ட வழங்கல் அலுவலர் சிவபாலன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்