கரூர் வணிக வரித்துறை அலுவலகத்தில் லஞ்ச ஓழிப்பு போலீசார் சோதனை

கரூர் வணிக வரித்துறை அலுவலகத்தில் லஞ்ச ஓழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.;

Update: 2022-10-14 19:00 GMT

கரூர் வணிக வரித்துறை அலுவலகம் வட்டம் 1-ஐ சேர்ந்த அதிகாரிகள் சிலர் அலுவலக பணி நேரம் முடிந்து, மாலை நேரங்களில் கரூர் கடைவீதிகளில் சென்று தீபாவளியையொட்டி வசூலில் ஈடுபடுவதாக கரூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கரூர் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வணிக வரித்துறை அலுவலகத்தில், கரூர் லஞ்ச ஓழிப்புத்துறை துணை சூப்பிரண்டு நடராஜன் தலைமையிலான போலீசார் நேற்று மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர். அப்போது துணை மாநில வணிகவரி அலுவலர் சந்தானம் (வயது 57), உதவியாளர் இளங்கோ (55), இளநிலை உதவியாளர் ரங்கநாதன் (37) ஆகியோரிடம் இருந்து மொத்தம் ரூ.30 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து 3 பேர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிந்து, இந்த பணம் அவர்களுக்கு எப்படி வந்தது? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்