மளிகை கடைகளில் போலீசார் சோதனை
பழனீல் உள்ள மளிகை கடைகளில் போலீசார் சோதனை நடத்தினர்.
கோடை விடுமுறை முடிந்து அடுத்த வாரம் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதையடுத்து கல்வித்துறை சார்பில் அனைத்து பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகிறது. குறிப்பாக தனியார் பள்ளி வாகனங்கள் குறித்து போக்குவரத்து, வருவாய் மற்றும் போலீஸ்துறை அதிகாரிகள் இணைந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சோதனை செய்தனர்.
இந்நிலையில் பழனி போலீசார், பள்ளி அருகே உள்ள மளிகை கடைகளில் போதைப்பொருள் விற்கப்படுகிறதா? என்று சோதனையில் ஈடுபட்டனர். டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயக்குமார் தலைமையிலான போலீசார் நகராட்சி பள்ளி அருகே உள்ள தற்காலிக மார்க்கெட் கடைகளில் நேற்று சோதனை செய்தனர். அப்போது, அங்கிருந்த கடைக்காரர்களிடம் பள்ளி மாணவர்களுக்கு எவ்வித போதை பொருட்களையும் விற்பனை செய்யக்கூடாது என அறிவுறுத்தினர்.
--------