பெட்டிக்கடைகளில் போலீசார் திடீர் சோதனை
புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா என பெட்டிக்கடைகளில் போலீசார் திடீர் சோதனை செய்தனர்.
ஆரணி
ஆரணி அடுத்த பையூர் ஊராட்சியில் உள்ள பெட்டிக்கடைகள், மளிகைக் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், ஆன்ஸ், குட்கா உள்ளிட்ட பொருட்கள் விற்கப்படுகிறதா என ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் பி.புகழ், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுந்தரேசன், ஷாபூதீன் மற்றும் போலீசார் சோதனை நடத்தினர்.
மேலும் ஒவ்வொரு கடைகளின் முன்பாக அறிவிப்பு நோட்டீஸ்களும் ஒட்டப்பட்டன.
புகையிலை பொருட்கள் விற்கப்படவது தெரிந்தால் வாட்க் அப் மூலம் புகார் தெரிவிக்கலாம் என நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.