நெல்லை ரெயில் நிலையத்தில் போலீசார் சோதனை

நெல்லை ரெயில் நிலையத்தில் போலீசார் சோதனை நடத்தினர்.

Update: 2022-10-15 19:49 GMT

தீபாவளி பண்டிகை வரும் 24-ந் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக பட்டாசு உள்ளிட்ட எளிதில் தீப்பற்ற கூடிய வெடி பொருட்களை பொதுமக்கள் ரெயிலில் எடுத்து செல்ல வாய்ப்புள்ளதால், அந்த பொருட்களை ரெயிலில் எடுத்து செல்ல ரெயில்வே நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இந்தநிலையில், நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சத்தியதாஸ், ஜான் ஆகியோர் தலைமையில், போலீசார் நேற்று ரெயில் நிலையத்தில் பயணிகள் பட்டாசு உள்ளிட்ட வெடி பொருட்களை கொண்டு செல்கின்றனரா? என கண்காணித்து, அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர்.

ரெயில்களில் வந்த பார்சல்களையும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலமாக போலீசார் சோதனை செய்தனர்.

மேலும், ரெயில்களில் பட்டாசுகளை கொண்டு செல்லக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஒலிபெருக்கி மூலம் அறிவித்ததுடன், ரெயில் நிலையத்துக்கு வந்த பயணிகளை அழைத்து விபத்தில்லா தீபாவளியை கொண்டாடும் வகையில் அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்