முத்துப்பேட்டையில், போலீசார் அணிவகுப்பு

முத்துப்பேட்டையில், போலீசார் அணிவகுப்பு

Update: 2022-08-28 18:36 GMT

முத்துப்பேட்டை

விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு முத்துப்பேட்டையில் வருகிற 6-ந்தேதி விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுகிறது. இதையடுத்து போலீசார் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று திருவாரூர் போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. புதிய பஸ் நிலையத்தில் புறப்பட்ட இந்த ஊர்வலம் ஆசாத்நகர், திருத்துறைப்பூண்டி சாலை, பழைய பஸ் நிலையம், நியூ பஜார், கொய்யா முக்கம், பங்களா வாசல், பட்டுக்கோட்டை சாலை வழியாக செம்படவன்காடு ெரயில்வே கேட் வரை சென்றது. ஊர்வலத்தில் திருவாரூர் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை, முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 550 போலீசார் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்