ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி இல்லத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி இல்லத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

Update: 2023-04-27 20:34 GMT

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தாராக பணிபுரிந்து வருபவர் ராஜன்பாபு. இவருடைய வீடு தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள தேப்பெருமாநல்லூர் காளியம்மன் கோவில் தெரு அருகில் உள்ளது. திருவாரூர் சாலை விரிவாக்க பணிக்கு இடம் கையகப்படுத்துதலின் போது ஏற்பட்ட குளறுபடியான நிகழ்வுகளுக்காக ஒரு சில அதிகாரிகளின் வீடுகளில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அதன் அடிப்படையில் ராஜன்பாபு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் பானுமதி தலைமையில் 5-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை சுமார் 12 மணி நேரம் நீடித்தது. 

Tags:    

மேலும் செய்திகள்