விருத்தாசலம் அருகே தூக்கில் மாணவன் பிணம் போலீசார் விசாரணை

விருத்தாசலம் அருகே தூக்கில் மாணவன் பிணமாக தொங்கினார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2023-07-16 18:45 GMT

கம்மாபுரம், 

விருத்தாசலம் அடுத்த இருப்புக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மகன் சந்துரு (வயது 16). இவன் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று காலையில் சந்துரு வெளியே சென்று வருவதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறி விட்டு சென்றான். பின்னர் நீண்ட நேரமாகியும் அவன் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவனது குடும்பத்தினர் சந்துருவை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். அப்போது வீட்டின் அருகில் உள்ள முந்திரி தோப்பில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சந்துரு பிணமாக தொங்கினான்.

போலீசார் விசாரணை

இதுபற்றி தகவல் அறிந்த ஊ.மங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சந்துருவின் உடலை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் சந்துருவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சந்துரு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்