சின்னசேலம் அருகே ஏரியில் அழுகிய நிலையில் பெண் பிணம் போலீசார் விசாரணை

சின்னசேலம் அருகே ஏரியில் அழுகிய நிலையில் பெண் பிணமாக கிடந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-05-06 18:45 GMT

சின்னசேலம், 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தகரை ஏரிக்கரை பகுதியில் நேற்று முன்தினம் மாலை 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சின்னசேலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த பெண்ணின் உடலை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே சிறுவாச்சூர் நடுத்தெருவை சேர்ந்த கோவிந்தன் மனைவி பச்சையம்மாள்(வயது 58) என்பது தெரியவந்தது. மேலும் இவர் கடந்த மாதம் 24-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர், சின்னசேலம் ஏரிக்கரையில் பிணமாக கிடந்ததும் தெரியவந்தது. ஆனால் அவரது சாவுக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதையடுத்து பச்சையம்மாளின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பச்சையம்மாள் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்