புளியரையில் போலீசார் சோதனை தீவிரம்
கேரளாவுக்கு வாகனங்களில் கனிம வளங்கள் அதிகளவில் கொண்டு செல்லப்படுகிறதா என்பது குறித்து புளியரையில் போலீசார் சோதனையில் தீவிரமாக ஈடுபட்டனர்.
செங்கோட்டை:
செங்கோட்டை அருகே உள்ள புளியரை சோதனை சாவடி வழியாக கேரளாவுக்கு லாரிகளில் அதிகளவில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் உத்தரவின் பேரில் புளியரை சோதனை சாவடியில் போலீசார் நேற்று அதிகாலை முதலே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவர்கள் லாரிகளை நிறுத்தி கேரளாவுக்கு அதிக கனிமவளங்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்று சோதனையிட்டனர். இதனால் ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றதை காண முடிந்தது.