பெரம்பலூர்-லெப்பைக்குடிக்காட்டில் போலீஸ் கொடி அணிவகுப்பு

பெரம்பலூர்-லெப்பைக்குடிக்காட்டில் போலீஸ் கொடி அணிவகுப்பு நடந்தது.;

Update:2022-08-29 23:42 IST

இந்துக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி நாளை (புதன்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பல்வேறு அமைப்புகள், தங்களது பகுதிகளில் விநாயகர் சிலைகளை வைத்து சிறப்பு பூஜைகள் செய்வார்கள். சில நாட்கள் கழித்து விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்சென்று நீர் நிலைகளில் கரைப்பார்கள். அதன்படி இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை வைத்து, ஊர்வலமாக எடுத்துச்செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பெரம்பலூரில் விநாயகர் சதுர்த்தி மற்றும் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு பல்வேறு பாதுகாப்பு முன்னேற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர். இதையொட்டி நேற்று மதியம் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பு பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி வடக்கு மாதவி ரோடு, சாமியப்பா நகர், எளம்பலூர் ரோடு வழியாக காமராஜர் வளைவில் நிறைவு பெற்றது. பேண்டு வாத்தியம் முழங்க நடந்த இந்த அணிவகுப்பில் போலீஸ் அதிகாரிகள், போலீசார் கலந்து கொண்டனர். இதேபோல் லெப்பைக்குடிக்காட்டிலும் போலீஸ் கொடி அணிவகுப்பு நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்