விநாயகர் சதுர்த்தி விழா குழுவினருடன் போலீசார் ஆலோசனை கூட்டம்

ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி விழா குழுவினருடன் போலீசார் ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2022-08-16 18:04 GMT

ஆரணி

வருகிற 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலைகள் அமைத்து கொண்டாடப்படும் விழா குழுவினருடன் விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் நடந்தது.

இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன் தலைமை தாங்கினார்‌. தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.புகழ் முன்னிலை வகித்தார். சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்

சிறப்பு அழைப்பாளராக துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் கலந்துகொண்டு பேசுகையில், விநாயகர் சிலை வைப்பவர்கள் காவல்துறையினரால் வழங்கப்படும் படிவத்தை பூர்த்தி செய்து வழங்க வேண்டும், அனுமதி பெற்ற பிறகு சிலை அமைக்க வேண்டும்,

விநாயகர் சிலைகள் களிமண்ணால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். சிலைகளுக்கு ஓலைகளால் ஆன மேற்கூரை அமைக்க கூடாது. மின்சாரம் பயன்படுத்துவதற்கு மின் துறையினரால் முறையாக அனுமதி பெற வேண்டும் உள்ளிட்ட தகவல்கள் குறித்து விளக்கி கூறினார்.

பின்னர் விழா குழுவினர், 5-ம் நாள் விநாயகர் சிலைகள் கரைப்பதற்கு எடுத்து செல்லும்போது கண்டிப்பாக டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.

இதில் இந்து முன்னணியினர், பா.ஜ.க. மற்றும் விழா குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்