தக்கலையில் பயணிகளிடம் போலீசார் திடீர் சோதனை
தக்கலையில் பயணிகளிடம் போலீசார் திடீர் சோதனை
தக்கலை:
அரசு பஸ்சுகள் மூலம் கஞ்சா கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின்பேரில் தக்கலை துணை சூப்பிரண்டு கணேசன் தலைமையில் தக்கலை இன்ஸ்பெக்டர் நெப்போலியன், சப் -இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் நேற்று மதியம் தக்கலை பழைய பஸ் நிலையத்தில் பஸ் பயணிகளிடம் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் அந்த வழியாக வந்த தமிழக மற்றும் கேரள அரசு பஸ்களை நிறுத்தி அவற்றில் இருந்த பயணிகளின் உடமைகளை சோதனையிட்டனர். இந்த திடீர் சோதனை பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.