மாணவ- மாணவிகளுக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு
அதிக மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவிகளை போலீஸ் கமிஷனர் பாராட்டினார்.
கோவை
பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற கோவை நகர காவல்துறையில் பணியாற்றும் போலீஸ் அதிகாரி கள் மற்றும் போலீசாரின் குழந்தைகளை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பாராட்டி புத்தகங்களை பரிசாக வழங்கினார்.
இதில்சரவணம்பட்டி போலீஸ் நிலைய ஏட்டு சரவணனின் மகள் ஸ்ரீநிதி பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று இருந்தார்.
இதேபோல் மதுவிலக்கு பிரிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மகள் பத்மதர்ஷினி, ரத்தினபுரி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஹரிதாஸ் என்பவருடைய மகன் ஆகாஷ்,
குற்றப்பிரிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுயம்பு என்பவருடைய மகள் தர்ஷினி ஆகியோர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றனர். அவர்களை போலீஸ் கமிஷனர் பாராட்டினார்.