திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் போலீசார் சோதனை

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் போலீசார் சோதனை நடத்தினர்.

Update: 2022-12-05 17:28 GMT

டிசம்பர் 6-ந்தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்ஜெயபால் தலைமையில் தனிப்பிரிவு ஏட்டு ராஜேஸ்குமார் மற்றும் போலீசார் நேற்று சோதனை நடத்தினர். அப்போது ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகளின் உடைமைகள், ரெயில் தண்டவாள பகுதிகள், பார்சல் அலுவலகம் ஆகியவற்றில் வெடி பொருட்கள் எதுவும் இருக்கிறதா? என மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் போலீசார் சோதனையிட்டனர்.

பயணிகள் சோதனை செய்யப்பட்ட பின்னரே ரெயில்கள் நிறுத்தப்பட்டிருக்கும் நடைமேடைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். மேலும் ரெயில் நிலையம் முன்பு நிறுத்தப்படும் ஆட்டோக்கள், கார்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இந்த சோதனை இன்றும் (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்