திருவாரூர் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை

திருவாரூர் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

Update: 2022-12-04 19:00 GMT

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி திருவாரூர் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

தீவிர கண்காணிப்பு

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாவட்ட எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் தணிக்கை செய்யப்படுகிறது.

ரெயில் நிலையம்

திருவாரூர் ரெயில்நிலையத்தில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தண்டபாணி மேற்பார்வையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவானந்தம், ரவிச்சந்திரன், ரெயில்வே பாதுகாப்பு படை தலைமை ஏட்டுகள் தனலெட்சுமி, தங்கமணி ஆகியோர் மெட்டல் டிடெக்டர் கருவி உதவியுடன் பயணிகளின் உடைமைகளை சோதனைக்கு உட்படுத்தினர்.

இதேபோல் ரெயில் பாதைகள், பிளாட்பாரங்கள் என அனைத்து பகுதிகளிலும் தீவிர சோதனை நடந்தது. திருவாரூர் வழியாக சென்ற அனைத்து ரெயில்களிலும் தொடர்ந்து சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்