சுங்கச்சாவடியில் போலீசார் வாகன சோதனை

பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.

Update: 2023-02-13 18:04 GMT

திருவண்ணாமலை மற்றும் போளூர் பகுதிகளில் அடுத்தடுத்து 4 ஏ.டி.எம். மையங்களில் உள்ள எந்திரங்களை உடைத்து பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. கொள்ளையர்களை படிக்க தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதன்படி அதன்படி வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் பள்ளிகொண்டா போலீசார் விடிய விடிய சோதனை நடத்தினர். தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரியும் இணைப்புச் சாலைகளிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் இன்ஸ்பெக்டர் கருணாகரன், தனிப்பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜகுமாரி, முருகன் மற்றும் போலீசார் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்