பிளக்ஸ் பேனர் வைத்தவர் மீது வழக்கு

தஞ்சையில் அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைத்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-02-02 21:40 GMT

தஞ்சாவூர்;

தஞ்சை மாநகராட்சி பகுதிகளில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக அனுமதியின்றி பிளக்ஸ் பேனர்கள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதை மீறி பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு வருகின்றன.அதன்படி தஞ்சை மாநகரில் பல்வேறு பகுதிகளில் புதுச்சேரி அரியாங்குப்பத்தை சேர்ந்த அரவிந்த் (வயது 27) என்பவர் பிளக்ஸ் பேனர் வைத்திருந்தார்.இது குறித்து மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் உத்தரவின் பேரில் இளநிலை பொறியாளர் கண்ணதாசன் தஞ்சை நகர மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் அரவிந்த் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்