ஒலிபெருக்கி மூலம் போலீசார் விழிப்புணர்வு
போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் இருக்க ஒலிபெருக்கி மூலம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஆரணி
ஆரணி நகரில் காந்தி ரோடு, மண்டி வீதி, மார்க்கெட் ரோடு, பெரிய கடை வீதி, பழைய, புதிய பஸ் நிலைய வளாகங்கள் முக்கிய பிரதான சாலைகளாக உள்ளன.
ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை காலங்களில் அதிக அளவில் மக்கள் கடைவீதிக்கு வருவார்கள்.
எனவே, பொதுமக்கள் அச்சமின்றி வந்து செல்லவும், பொதுமக்களுக்கு இடையூறு இன்றி சாலைகளில் செல்ல வசதியாக இருபக்கமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தொடர்ந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வழிப்பறி, கொள்ளை சம்பவங்கள் நடைபெறாமல் கண்காணிக்கும் பணியினை ஆரணி துணை போலிஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மேற்பார்வையில் ஆரணி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன் தலைமையில் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுந்தரேசன், கிருஷ்ணமூர்த்தி, மகேந்திரன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலிங்கம் மற்றும் போலீசார் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பொதுமக்களுக்கு போலீசார் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் பேசுகையில். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது, இருசக்கர வாகனங்களில் 2 பேருக்கு மேல் செல்லக்கூடாது,
வாகன உரிமம் இல்லாமல் வண்டி ஓட்டக்கூடாது, தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். கடைக்காரர்கள் கடைகளை சாலைக்கு கொண்டு வரக்கூடாது என்று கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.