அரசு பள்ளிகளில் போலீசார் விழிப்புணர்வு
அரசு பள்ளிகளில் போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி உத்தரவின்படி பெரம்பலூர், மேலப்புலியூர் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன் மற்றும் அவரது குழுவினரான சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மருதமுத்து, பார்வதி, சுமா ஆகிய போலீசார் மாணவ-மாணவிகளிடையே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும், ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் செயல்படும் பெண்கள் உதவி மையம் இலவச தொலைப்பேசி எண் 181 குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.