பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து போலீசார் விழிப்புணர்வு

அரசு பள்ளியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Update: 2022-11-03 18:30 GMT

அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவுபடி அரியலூர் மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு ேபாலீசார் கிராமங்கள் தோறும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் தலைமையிலான போலீசார் அரியலூர் நிர்மலாகாந்தி நடுநிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்களுக்கு குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும் அவசரகால உதவி எண்கள் 100, 1098, 181 மற்றும் காவல் உதவி செயலி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்