கண்ட்ரோல் ரூமுக்கு போன் போட்டு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல்..! பட்டதாரி இளைஞர் கைது

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-09-30 09:26 GMT

சென்னை:

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், பல்வேறு இடங்களில் வெடிகுண்டு வெடிக்க இருப்பதாக மிரட்டல் விடுத்தார். மர்மநபர் பேசிய செல்போன் எண்ணைக் கொண்டு, அவரைக் கண்டறியும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

இந்நிலையில் மீஞ்சூர் அருகே. செல்போன் சிக்னல் காட்டியதைத் தொடர்ந்து, அங்கு சென்ற போலீசார், ரெயில் நிலையத்தில் இருந்த நபரை கைது செய்தனர்.

இதுதொடர்பாக அந்த நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அனுப்பம்பட்டு பகுதியை சேர்ந்த பட்டதாரி இளைஞரான லோகேஷ் என்கிற விக்னேஷ் என தெரியவந்தது. பின்னர் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்