ரேஷன் அரிசியை கடத்திய வாலிபர் கைது

திருப்பூர் அருகே காரில் 625 கிலோ ரேஷன் அரிசியை கடத்திய வாலிபரை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் கைது செய்து ரேஷன் அரிசி, காரை பறிமுதல் செய்தனர்.

Update: 2023-10-22 13:30 GMT

திருப்பூர்

திருப்பூர் அருகே காரில் 625 கிலோ ரேஷன் அரிசியை கடத்திய வாலிபரை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் கைது செய்து ரேஷன் அரிசி, காரை பறிமுதல் செய்தனர்.

போலீசார் வாகன சோதனை

குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் ஐ.ஜி. ஜோசி நிர்மல்குமார் உத்தரவுப்படி, போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி, துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் ஆகியோர் மேற்பார்வையில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

அதன்படி திருப்பூர் அவினாசிபாளையம் தாராபுரம் ரோடு-காங்கயம் பிரிவு பகுதியில் திருப்பூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மேனகா, சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்தி, கிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.

ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

அப்போது அந்த வழியாக சந்தேகத்துக்கு இடமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காருக்குள் ரேஷன் கடையில் வழங்கக்கூடிய 625 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து காரில் வந்தவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் குண்டடம் பகுதியை சேர்ந்த சதாசிவம் (வயது 33) என்பதும் தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை குறைந்தவிலைக்கு வாங்கி பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ய கடத்திச்சென்றது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சதாசிவத்தை கைது செய்து அவரிடம் இருந்து 625 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்