தேனியில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தேனியில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தேனி போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்யா தலைமையில், தேனி அரண்மனைப்புதூர் விலக்கு பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியான நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து, அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டனர். அதில் 2 கிலோ 250 கிராம் கஞ்சா இருந்தது. விசாரணையில் அவர் அடைக்கம்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த சுருளி மகன் கோபி (வயது 26) என்பதும், கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கோபியை கைது செய்தனர்.