வெண்குன்றம் மலையில் போலீசார் தீவிர கண்காணிப்பு

வந்தவாசி அருகே வெண்குன்றம் மலையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Update: 2022-11-24 17:00 GMT

வந்தவாசி

வந்தவாசி அருகே வெண்குன்றம் கிராமத்தில் மிகப்பெரிய மலை உள்ளது. இந்த மலையில் 1,440 அடி உயரத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் தவளகிரீஸ்வரர் கோவில் உள்ளது.

இந்த மலை மீது வந்தவாசியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கார்த்திகை தீபத்தன்று மலைக்கு செல்வது வழக்கம்.

புகழ் பெற்ற இந்த மலையில் உள்ள தவளகிரீஸ்வரர் கோவிலை கடந்த ஆகஸ்டு மாதம் சமூக விரோதிகள் சேதப்படுத்தி உள்ளனர். மேலும் தற்போது இந்த மலையில் சமூக விரோதிகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் மலையின் அடிவாரத்தில் காவல்துறை அதிகாரிகள் தடுப்பு வேலி அமைத்து தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவிலுக்கு வரும் பக்தர்களை தீவிரமாக சோதனை செய்து, அவர்களுடைய முழு விலாசத்தை பெற்றுக் கொண்ட பிறகு தான் மலைக்கு செல்ல அனுமதித்து வருகின்றனர்.

கோவை குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த நிலையில் வெண்குன்றம் மலையின் அடிவாரத்தில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் சம்பவம் வந்தவாசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்