கள்ள ரூபாய் நோட்டு புழக்கத்தில் விட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியை பிடிக்க போலீசார் தீவிரம்

நெல்லையில் கள்ள ரூபாய் நோட்டு புழக்கத்தில் விட்ட வழக்கில் தலைமறைவான முக்கிய குற்றவாளியை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Update: 2022-09-12 19:39 GMT

நெல்லையில் கள்ள ரூபாய் நோட்டு புழக்கத்தில் விட்ட வழக்கில் தலைமறைவான முக்கிய குற்றவாளியை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

கள்ள ரூபாய் நோட்டு

நெல்லை பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளை நகர் பகுதியில் உள்ள ஓட்டலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிலர் சாப்பிட்டு விட்டு 500 ரூபாய் கள்ள நோட்டை கொடுத்து ெசன்றனர். இதுகுறித்து ஓட்டல் நிர்வாகி அளித்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இதுதொடர்பாக மேலப்பாளையத்தைச் சேர்ந்த இர்பான் (வயது 30), வீரவநல்லூரைச் சேர்ந்த சூரிய பிரகாஷ் (24), நெல்லை கே.டி.சி. நகரை சேர்ந்த சங்கர் கணேஷ் (34) மற்றும் 18 வயது சிறுவன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 500 ரூபாய் கள்ள நோட்டுகள் 2-ம் பறிமுதல் செய்யப்பட்டது.

முக்கிய குற்றவாளியை பிடிக்க தீவிரம்

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கேரளாவைச் சேர்ந்த ஒருவர், கள்ள ரூபாய் நோட்டுகளை இர்பானிடம் கொடுத்து புழக்கத்தில் விடுமாறு கூறியுள்ளார். அந்த கள்ள ரூபாய் நோட்டுகளை பெற்று கொண்ட இர்பான் தனது நண்பரும், கோவில் பூசாரியுமான சங்கர் கணேசிடம் கொடுத்து புழக்கத்தில் விட்டுள்ளார்.

இதற்கிடையே போலீசாரிடம் சிக்கி கொள்வோம் என்று அஞ்சிய சங்கர் கணேஷ் தன்னிடம் இருந்த 500 ரூபாய் கள்ள நோட்டுகளை தீ ைவத்து எரித்ததும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து கேரளாவில் தலைமறைவான முக்கிய குற்றவாளியை பிடிப்பதற்கு போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அவரை பிடித்தால்தான், கள்ள ரூபாய் நோட்டுகளை எங்கு தயாரித்தனர்?, இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்