திருப்பூர் மாநகரில் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு கலவர தடுப்பு ஒத்திகை பயிற்சி போலீஸ் கமிஷனர் பிரபாகரன் தலைமையில் மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. இதில் 100 போலீசார் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். போலீஸ் கமிஷனர் பிரபாகரன் தடுப்பு உபகரணங்களை நேரடியாக ஆய்வு செய்து போலீசாருக்கு ஆலோசனை வழங்கினார். இதில் போலீஸ் துணை கமிஷனர்கள் அபினவ்குமார், வனிதா, ஆயுதப்படை கூடுதல் போலீஸ் துணை கமிஷனர் மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.