தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது

Update:2022-09-17 22:47 IST

தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைதுதொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது

தாராபுரத்தை அடுத்த நாரணாபுரத்தை சேர்ந்த பரமசிவன் மகன் பாலசுப்பிரமணி (வயது 23). கோழிப்பண்ணையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்த இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள 14 வயது சிறுமியிடம் அவரது தாய், தந்தை இல்லாத நேரத்தில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுகுறித்து இந்த சிறுமி தனக்கு நடந்த கொடுமை குறித்து தாயிடம் கூறியுள்ளார். இதனை அறிந்த பெற்றோர் தாராபுரம் மகளிர் போலீஸ் நிலையத்தில் பாலசுப்பிரமணி மீது புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜாதா, அவரை அழைத்து விசாரணை நடத்தினார். அப்போது பாலசுப்பிரமணி சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஒப்புக்கொண்டார். இதனையடுத்து போலீசார் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பாலசுப்பிரமணியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்