வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் விஷ வண்டுகள்

சீர்காழி அருகே வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் விஷ வண்டுகளை அழிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-09-12 17:28 GMT

சீர்காழி;

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பனங்காட்டான்குடி சாலை உள்ளது. இந்த சாலையை கடந்து தான் அகனி, மன்னன் கோவில், வள்ளுவக்குடி, ஏனாக்குடி, கொண்டல், அகரஎலத்தூர், பனங்காட்டான்குடி, நிம்மேலி, புங்கனூர், ஆதமங்கலம், பெருமங்கலம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் செல்ல வேண்டும். இந்த சாலையில் ராமாபுரம் என்ற இடத்தில் உள்ள ஒரு பனை மரத்தில் விஷவண்டுகள் பல மாதங்களாக கூடுகட்டி உள்ளது. இந்த கூட்டில் உள்ள விஷ வண்டுகள் கூட்டை விட்டு வெளியே வந்து சாலையில் நடந்து செல்பவர்கள் மட்டும் வாகனங்களில் செல்பவர்களை கடித்து துன்புறுத்தி வருகிறது. இதனால் இந்த பகுதியை கடந்து செல்லும் பாதசாரிகள் மட்டும் வாகன ஓட்டிகள் அச்சத்தோடு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் விஷவண்டுகளை அழிக்க வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்