சென்னையில் உள்ள தனியார் வங்கியில் ஏ.சியில் இருந்து விஷவாயு கசிவு - 13 ஊழியர்கள் மயக்கம்
வாயு கசிந்ததில் வங்கி ஊழியர்கள் 13 பேருக்கு மூச்சுத் திணறல் மற்றும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.;
சென்னை,
சென்னை பெருங்குடியில் செயல்படும் தனியார் வங்கியில் இரவு நேர பணியாளர்கள், வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது வங்கியில் உள்ள ஏ.சியில் இருந்து உடலுக்கு ஒவ்வாத வாயு கசிந்தது. இந்த வாயு கசிந்ததில் வங்கி ஊழியர்கள் 13 பேருக்கு மூச்சுத் திணறல் மற்றும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து ஊழியர்கள் 13 பேரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.