மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் உருவச்சிலை இன்று திறப்பு; கவிஞர் வைரமுத்து டுவிட்டரில் வாழ்த்து!

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் சிலை திறக்கப்படுவது குறித்து கவிஞர் வைரமுத்து கவிதை வாயிலாக வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

Update: 2022-05-28 08:04 GMT

சென்னை,

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் உருவச்சிலையினை, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள விழாவில் இன்று மாலை 5.30 மணியளவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திறந்துவைக்க உள்ளார்.

இந்நிலையில், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் சிலை திறக்கப்படுவது குறித்து கவிஞர் வைரமுத்து கவிதை வாயிலாக வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

14 அடி உயர பீடத்தில், 16 அடி உயரத்தில் வெண்கலத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தி திணிப்பு எதிர்ப்பு, மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி உள்ளிட்ட முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 5 கட்டளைகள் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சிலை திறப்பு விழா குறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது,

'இறந்தும் வாழும் உயிரானாய்... இன்று சிலையானாய்...' என்று கவிதை நடையில் பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்