கோவை மத்திய சிறைக்கு போக்சோ கைதி மாற்றம்

கோவை மத்திய சிறைக்கு போக்சோ கைதி மாற்றப்பட்டார்.

Update: 2023-06-06 19:54 GMT

குற்ற வழக்குகளில் சிறை தண்டனை பெற்ற கைதிகளை நல்வழிப்படுத்தி, அவர்கள் சிறையில் இருந்து வெளியே செல்லும்போது அவர்களின் மறுவாழ்வுக்கு வழிவகை செய்யும் வகையில் பல்வேறு தொழிற்பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில், திருச்சி மத்திய சிறையில் உள்ள தொழிற்பயிற்சி மையத்தில் தையல் பயிற்சி உள்பட பல்வேறு தொழிற்பயிற்சிகளில் 150-க்கும் மேற்பட்டோர் பயிற்சி பெற்று வருகிறார்கள்.இவர்களில் போக்சோ வழக்கில் தண்டனை பெற்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சேலத்தை சேர்ந்த திருமூர்த்தி (வயது 23), தையல் பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்தார். கடந்த 1-ந்தேதி தையல் பயிற்சி அளிக்க வந்த ஆசிரியைக்கு திருமூர்த்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. ஆனால் சிறைத்துறை நிர்வாகம் இந்த புகாரை மறுத்தது.இந்தநிலையில், பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான கைதி திருமூர்த்தி நேற்று முன்தினம் திருச்சி மத்திய சிறையில் இருந்து கோவை மத்திய சிறைக்கு அதிரடியாக மாற்றப்பட்டார். மேலும் ஆண் கைதிகளுக்கு ஆண் பயிற்சியாளர்களை கொண்டே பயிற்சி அளிக்க சிறை நிர்வாகம் முடிவு செய்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்