சிறுமியை கர்ப்பமாக்கிய கொத்தனார் மீது போக்சோவில் வழக்கு

சிறுமியை கர்ப்பமாக்கிய கொத்தனார் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-08-25 20:07 GMT

ஜீயபுரம்:

முக்கொம்பு அருகில் உள்ள கொடியாலம் காந்திநகரை சேர்ந்தவர் தமிழரசன்(வயது 26). கொத்தனாரான இவர், 10-ம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்து வரும் 17 வயது சிறுமியை காதலித்து வந்ததாகவும், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த சிறுமி திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றபோது 7 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. மேலும் அந்த சிறுமியை திருமணம் செய்ய தமிழரசன் மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து சிறுமி கொடுத்த புகாரின்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் தமிழரசன் மீது ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்