மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி மீது போக்சோவில் வழக்கு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
லால்குடி:
லால்குடி அருகே மேலவாளாடி பகுதியை சேர்ந்தவர் ஜெகதீசன். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் லால்குடி ஒன்றிய செயலாளராக உள்ளார். இவர் தனது செல்போனில் இருந்து ஒரு மாணவிக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் தந்தை கொடுத்த புகாரின்பேரில் லால்குடி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாலதி மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஜெகதீசனை வலைவீசி தேடி வருகின்றனர்.