மாணவர்களுக்கு போக்சோ விழிப்புணர்வு
ஊட்டி பிரிக்ஸ் பள்ளியில் மாணவர்களுக்கு போக்சோ விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.;
ஊட்டி,
தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின் படி, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பயன்பாட்டை ஒழிப்பது குறித்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கஞ்சா பயன்பாட்டை ஒழித்தல் மற்றும் போக்சோ சட்டம் குறித்து ஊட்டி பிரிக்ஸ் பள்ளியில் நேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஊட்டி மத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிக்குமார் கலந்து கொண்டு, மாணவ-மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்து விளக்கினார். மேலும் பாலியல் தொந்தரவுகள் போன்ற பாதிப்பு ஏற்பட்டால் தயங்காமல் பெற்றோர் அல்லது போலீசாரிடம் தகவல் தெரிவிக்கலாம். மேலும் இதுகுறித்து தங்களது நண்பர்களுக்கும் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார். இதில் பிரிக்ஸ் பள்ளி முதல்வர், மாணவர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.