பா.ம.க. போராட்டத்தில் வன்முறை

நெய்வேலியில் அன்புமணிராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பா.ம.க. போராட்டத்தில் வன்முறை வெடித்தது

Update: 2023-07-28 18:50 GMT

கடலூர்

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் 1956-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இது பொதுத்துறை நிறுவனம் ஆகும்.

2-வது சுரங்கம் விரிவாக்கம்

இந்த நிறுவனத்தில் சுரங்கம்-1, சுரங்கம்-2, சுரங்கம்-1ஏ ஆகிய 3 திறந்தவெளி சுரங்கங்கள் உள்ளன. ராட்சத எந்திரங்கள் மூலம் நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு, 4 அனல்மின் நிலையங்கள் மூலமாக ஒரு மணி நேரத்திற்கு 3,400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த நிலையில் நிலக்கரி தட்டுப்பாட்டால் அடுத்த மாதம்(ஆகஸ்டு) முதல் 1000 மெகாவாட் மின் உற்பத்தியை நிறுத்தப்போவதாக என்.எல்.சி. அறிவித்துள்ளது.

எனவே 2-வது சுரங்கத்தை விரிவாக்கம் செய்வதற்காக கரிவெட்டி, கத்தாழை, மும்முடி சோழகன், வளையமாதேவி உள்ளிட்ட பகுதியில் புதிய பரவனாறுக்கு மாற்றுப்பாதை அமைக்கும் பணியை கடந்த 26-ந்தேதி என்.எல்.சி. நிர்வாகம் தொடங்கியது.

விளைநிலத்தில் சாகுபடி செய்திருந்த பயிர்கள் அனைத்தும் 15-க்கும் மேற்பட்ட ராட்சத பொக்லைன் எந்திரங்கள் மூலம் அழிக்கப்பட்டு, பரவனாறுக்கு மாற்றுப்பாதை வெட்டும் பணி நடந்தது. இதற்கு பா.ம.க.வினா் மற்றும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் என்.எல்.சி.க்கு எதிர்ப்பு தெரிவித்து மர்மநபர்கள் கல்வீசியதில் 20 பஸ்களின் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதனால் பெரும்பாலான பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன.

முற்றுகை போராட்டம்

இந்த நிலையில் என்.எல்.சி. நிலம் கையகப்படுத்துவதை கைவிடக்கோரி 28-ந்தேதி(அதாவது நேற்று) என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. அறிவித்தார். இதையொட்டி வடக்கு மண்டல ஐ.ஜி.கண்ணன், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. ஜியாஉல்ஹக், போலீஸ் சூப்பிரண்டுகள் கடலூர் ராஜாராம், கள்ளக்குறிச்சி மோகன்ராஜ், திருவண்ணாமலை கார்த்திகேயன் மற்றும் 6 மாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக என்.எல்.சி. ஆர்ச் கேட் முன்பு குவிக்கப்பட்டனர். மேலும் கலவரம் ஏற்பட்டால் அதை கட்டுப்படுத்தும் வகையில் வஜ்ரா மற்றும் வருண் வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

தமிழகமே ஸ்தம்பிக்கும்

இதையடுத்து நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. ஆர்ச்கேட் முன்பு பா.ம.க. முற்றுகை போராட்டம் மதியம் 12 மணிக்கு தொடங்கியது. ஏழை, எளிய விவசாயிகளின் விளை நிலங்களை கையகப்படுத்தும் என்.எல்.சி. நிர்வாகத்தின் அராஜக போக்கை கண்டித்தும், என்.எல்.சி. நிர்வாகத்தை வெளியேற்ற வலியுறுத்தியும் நடைபெற்ற போராட்டத்திற்கு பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கி, கண்டன உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், நான் இங்கு வருவேன் என்று தெரிந்ததும், என்.எல்.சி. நிறுவனம் இன்று ஒரு நாள் மட்டும் வேலையை நிறுத்தி உள்ளது. நாளை மீண்டும் நிலத்தை கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டால் ஒட்டுமொத்தமாக சாலை மறியல் செய்ய வேண்டு்ம். அந்த போராட்டம் அடையாளத்திற்காக செய்யக்கூடாது. ஒரு எந்திரம் வயலில் இறங்கினால் கூட கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகமே ஸ்தம்பிக்கும். இது மண்ணையும், மக்களையும் காப்பாற்றும் போராட்டமாக இருக்க வேண்டும் என்றார்.

டாக்டர் அன்புமணி ராமதாஸ் கைது

இதனை தொடர்ந்து டாக்டர் அன்புமணி ராமதாஸ், நிர்வாகிகளுடன் என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தை நோக்கி நடந்து சென்றார். அப்போது என்.எல்.சி. ஆர்ச் கேட் நுழைவுவாயிலில் நின்றிருந்த போலீசார், பா.ம.க.வினரை உள்ளே நுழைய விடாமல் தடுத்தனர். உடனே பா.ம.க.வினர் என்.எல்.சி.யை கண்டித்து கோஷமிட்டனர்.

இதையடுத்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பா.ம.க. நிர்வாகிகளை போலீசார் கைது செய்து 4 போலீஸ் வாகனங்களில் ஏற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க. தொண்டர் ஒருவர், அன்புமணி ராமதாஸ் இருந்த போலீஸ் வாகனத்தின் மேற்கூரையில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை போலீசார் கீழே இறங்க செய்தனர்.

போலீசார் மீது கல்வீச்சு

உடனே அங்கிருந்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஏற்றப்பட்ட போலீஸ் வாகனம் மெதுவாக நகர்ந்தது. இதை பார்த்து கொந்தளித்த பா.ம.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சாலையோரத்தில் கிடந்த கற்களை எடுத்து போலீஸ்காரர்கள் மீது சரமாரியாக வீசினர். மேலும் போலீஸ் வாகனங்கள் மீதும் கற்கள் வீசப்பட்டன. இதில் 2 போலீஸ் வாகனங்களின் கண்ணாடி உடைந்தது.

போராட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலில் நெய்வேலி நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல்அமீது, ராணிப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் 18 போலீஸ்காரர்கள் காயமடைந்தனர். இதில் ஜெயந்தி, பழனியம்மாள், கலைச்செல்வி ஆகிய 3 பெண் போலீசாரும் அடங்குவர்.

போராட்டக்காரர்கள் மீது தடியடி

இதை பார்த்த உயர் போலீஸ் அதிகாரிகள், போராட்டக்காரர்களை தடியடி நடத்தி கலைக்க உத்தரவிட்டனர். இதனை தொடர்ந்து போலீசார், போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினர். உடனே போராட்டக்காரர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

வடலூர்-கும்பகோணம் சாலையில் நின்று கொண்டு இருந்த சிலர் மீண்டும் போலீஸ்காரர்கள் மீது கற்களை வீசினர். இதையடுத்து வருண் வாகனங்கள் மூலம் போராட்டக்காரர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். அதையும் பொருட்படுத்தாத சிலர் பெரியகற்களை எடுத்து வந்து வருண் வாகனங்கள் மீதும் தாக்கினர்.

கண்ணீர் புகை குண்டு வீச்சு

இதையடுத்து போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது. இதனால் அந்த பகுதியே போர்க்களம்போல் காணப்பட்டது. அந்த பகுதியில் கற்கள், செருப்புகள், தண்ணீர் பாட்டில்கள் சிதறி கிடந்தன. வன்முறையில் ஈடுபட்டவர்களை விரட்டிச் சென்று போலீசார் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதனிடையே டாக்டர் அன்புமணி ராமதாசை ஏற்றி வந்த போலீஸ் வாகனத்தை மறித்தும் பா.ம.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவரை விடுவிக்கக்கோரி கோஷமிட்டனர். அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

கைதான டாக்டர் அன்புமணி ராமதாஸ் உள்பட 1000 பேர், ஆர்ச்கேட் அருகில் உள்ள கே.என்.டி. திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

இந்த வன்முறையால் நெய்வேலி முழுவதும் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன. வாகன போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.கடலூர், ஜூலை.29-

இந்த வன்முறையால் நெய்வேலி முழுவதும் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன. வாகன போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்