பா.ம.க. கண்டன ஆர்ப்பாட்டம்
உளுந்தூர்பேட்டையில் பா.ம.க. கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உளுந்தூர்பேட்டை,
கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் டாக்டர் ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் புகைப்பட்டி செந்தில் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக மாநில வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி கலந்து கொண்டு, உளுந்தூர்பேட்டையில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு தமிழக அரசு துணை போகிறது. மேலும் பா.ம.க. மற்றும் வன்னியர்கள் சங்க நிர்வாகிகள் மீது தொடர்ந்து உளுந்தூர்பேட்டை, எலவனாசூர்கோட்டை போலீசார் பொய் வழக்கு பதிவு செய்வதாக கூறி, அதனை கண்டித்து கோஷங்களை எழுப்பினார். இதில் மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார், மாநில தேர்தல் பணிக்குழு தலைவர் அன்பழகன், வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் திருத்தணி ரவிராஜ் ,மாநில இளைஞர் சங்க செயலாளர் வடிவேலன், மாவட்ட செயலாளர்கள் விழுப்புரம் மத்தியம் பாலசக்தி, கள்ளக்குறிச்சி மேற்கு தமிழரசன், கடலூர் மேற்கு கார்த்திகேயன், விழுப்புரம் கிழக்கு ஜெயராஜ், கடலூர் தெற்கு செல்வ மகேஷ், கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட பொருளாளர் மகேஸ்வரி, மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் ஏ.கே .சாமி, வன்னியர் சங்க நிர்வாகிகள் நாராயணன், முருகன், ஆதி விஸ்வநாதன், நகர செயலாளர் சண்முகம் மற்றும் ஒன்றிய செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து உளுந்தூர்பேட்டை நகராட்சிக்கு உட்பட 12 வார்டுகளில் பா.ம.க. கட்சி கொடி ஏற்றப்பட்டது. முடிவில் மாவட்ட துணைச் செயலாளர் சத்யா நன்றி கூறினார்.