பா.ம.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

பா.ம.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

Update: 2022-11-27 18:45 GMT

நாகையில் நடந்த பா.ம.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு பேசினார்.

ஆலோசனை கூட்டம்

பா.ம.க. கட்சியின் மூத்த நிர்வாகிகள், கட்சியின் முன்னோடிகளை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து கலந்துரையாடி வருகிறார். அதன்படி நேற்று நாகையில் மாவட்ட பா.ம.க நிர்வாகிகள் ஆலோசனை‌ கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பா.ம.க. நாகை மாவட்ட செயலாளர் சித்திரவேல் தலைமை தாங்கினார்.

அன்புமணி ராமதாஸ் பங்கேற்பு

கூட்டத்தில் பா.ம.க மாநில தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பா.ம.க. செயல் திட்டங்கள் மற்றும் கட்சியை மேலும் வலுப்படுத்த தேவையான ஆலோசனைகள், வளர்ச்சிகள் குறித்து பேசினார்

இதில் பா.ம.க மாநில கவுரவ தலைவர் ஜி.கே. ‌மணி எம்.எல்.ஏ., உழவர் பேரியக்க மாநில தலைவர் ஆலயமணி, முன்னாள் மாநில துணைத் தலைவர் வேதமுகுந்தன், மாவட்ட அமைப்பு செயலாளர் காளி, இளைஞர் அணி மாவட்ட செயலாளர் பாண்டித்துரை, முன்னாள் மாவட்ட தலைவர் வைர சிவகுமார் மற்றும் பா.ம.க. மாநில, மாவட்ட மூத்த முன்னோடிகள், ஒன்றிய, நகர, பேரூர், இளைஞரணி, மகளிரணி நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்