பா.ம.க. நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்

காவேரிப்பாக்கத்தில் பா.ம.க. நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

Update: 2023-02-11 17:27 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் பா.ம.க. ஒன்றிய, நகர, பேரூர் தலைவர்கள், அமைப்பு செயலாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நேற்று மாலை நடந்தது. கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட அமைப்பு தலைவர் ஜெகன்நாதன் முதலியார் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பு செயலாளர்கள் கார்த்திக்ராசா, தங்கதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேற்கு மாவட்ட அமைப்பு தலைவர் சுரேஷ் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக மாநில அமைப்பு செயலாளர் தர்மபுரி ப.சண்முகம், மாநில அமைப்பு தலைவர் கடலூர் பழ.தாமரைகண்ணன், மாவட்ட செயலாளர்கள் க.சரவணன், எம்.கே.முரளி, மாவட்ட தலைவர் அ.ம.கிருஷ்ணன், மாவட்ட பொருளாளர்கள் உமாமகேஸ்வரி, ஞானசவுந்தரி ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கி பேசினர்.

கூட்டத்தில் தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் காணாமல் போன அன்னை தமிழை தேடி பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வருகிற 21-ந் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 8 நாள் விழிப்புணர்வு பிரசார நடைபயணம் மேற்கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்வது, டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கரங்களை வலுபடுத்தும் வகையில் மே 5-ந் தேதி நடைபெறும் சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் சென்று மாநாட்டிற்கு அழைத்து வருவது, பூத் கமிட்டி அமைத்து பா.ம.க. கொடியேற்றுவது மற்றும் பா.ம.க. கிளை அமைப்பு இல்லாத கிராமங்களில் கிளை அமைத்து பூத் கமிட்டி பொறுப்பாளர்களை நியமனம் செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் கிழக்கு மேற்கு ஒன்றிய, நகர, பேரூர், அமைப்பு தலைவர்கள், செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் காவேரிப்பாக்கம் பேரூராட்சி அமைப்பு செயலாளர் வினோத்குமார் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்