பா.ம.க. செயற்குழு கூட்டம்
அரியலூரில் பா.ம.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
அரியலூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று பா.ம.க. மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி ரவி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில், வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் வீடுதோறும் சென்று பிரசாரம் செய்தல், வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடத்துதல், கிளை நிர்வாகிகள் கூட்டம் நடத்துதல் உள்ளிட்டவற்றை நடத்த வேண்டும், தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்தி அனைத்து சமுதாயத்தினருக்கும் உரிய இடஒதுக்கீட்டை விரைந்து வழங்கிட வேண்டும். அரியலூர் சோழர் பாசன திட்டத்தை விரைந்து செயல்படுத்திட தமிழக அரசை கேட்டுக்கொள்வது, பள்ளி-கல்லூரி மாணவர்களை சீரழிக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை ஒழிக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.