பா.ம.க. மாநில பெண் நிர்வாகியின் கார் மீது பஸ் மோதல்
பா.ம.க. மாநில பெண் நிர்வாகியின் கார் மீது பஸ் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகாசி,
பட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளராக இருப்பவர் சிவகாசியை சேர்ந்த திலகபாமா. இவர் சம்பவத்தன்று அதிவீரன்பட்டி கிராமத்தில் உள்ள தனது தோட்டத்திற்கு சென்று விட்டு காரில் வீடு திரும்பி உள்ளார். காரை விஷ்ணுவரதன் (வயது 27) என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் மெயின்ரோட்டில் வந்து கொண்டிருந்த போது பின்னால் வந்த தனியார் பஸ், திடீரென கார் மீது மோதியது. இதில் கார் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் இல்லை. இதுகுறித்து விஷ்ணுவரதன் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் தனியார் பஸ் டிரைவர் முனியசாமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.