பா.ம.க. கொடிக்கம்பம் உடைப்பு

கடலூரில் பா.ம.க. கொடிக்கம்பம் உடைக்கப்பட்டது.

Update: 2023-03-30 20:34 GMT

கடலூர்:

கடலூர் சாவடி பஸ் நிறுத்தம் அருகே பா.ம.க. கொடிக்கம்பம் இருந்தது. இந்த கொடிக்கம்பத்தை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் யாரோ உடைத்து போட்டுள்ளனர். இதை அறிந்ததும் அப்பகுதியில் பா.ம.க.வினர் திரண்டனர். இது பற்றி அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கொடிக்கம்பத்தை உடைத்த நபர்கள், அங்கிருக்கும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளார்களா? என்றும் ஆய்வு செய்தனர். தொடர்ந்து நேற்று காலை மீண்டும் கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்திற்கு வந்த பா.ம.க.வினர், கொடிக்கம்பத்தை உடைத்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மனு அளித்தனர். விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதன் பேரில், அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இருப்பினும் நள்ளிரவில் பா.ம.க.கொடிக்கம்பம் உடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்