பா.ம.க. நிர்வாகிகள் கூட்டம்

பா.ம.க. நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

Update: 2022-08-09 15:08 GMT

நல்லம்பள்ளி:-

நல்லம்பள்ளியில் பா.ம.க. ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்்து. ஒன்றிய செயலாளர்கள் அன்பு கார்த்திக், அறிவு ஆகியோர் தலைமை தாங்கினர். ஒன்றிய நிர்வாகிகள் முருகன், வடிவேல், தேர்தல் பணிக்குழு ஒன்றிய பொறுப்பாளர்கள் கல்யாணசுந்தரம், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களுக்கு காவிரி உபரிநீர் கொண்டு வரும் திட்டத்தை செயல்படுத்தக்கோரி தமிழக அரசை வலியுறுத்தி பா.ம.க. மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தலைமையில் வருகிற 19, 20, 21 ஆகிய 3 நாட்கள் மாவட்டம் முழுவதும் நடைபெறும் பிரசார நடைபயணத்தில் விவசாயிகள், வணிகர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பொறுப்பாளர்கள், பொதுமக்கள் மற்றும் கட்சியினர் பங்கேற்க வைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் பெரியசாமி, மாவட்ட அமைப்பு செயலாளர் சண்முகம், மாவட்ட துணை பொறுப்பாளர்கள் காமராஜ், மனோகரன், முத்துவேல், குப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய செயலாளர் ராஜீவ்காந்தி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்