பா.ம.க. சார்பில் கடிதம் அனுப்பும் போராட்டம்
இடஒதுக்கீடு வழங்கக்கோரி பா.ம.க. சார்பில் கடிதம் அனுப்பும் போராட்டம் நடந்தது.
நெமிலியை அடுத்த சம்பத்துராயன்பேட்டை கிராமத்தில் நெமிலி வடக்கு ஒன்றிய பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் உள்இடஒதுக்கீடு வழங்கக்கோரி கடிதம் அனுப்பும் அறப்போராட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் மாதவன் தலைமை தாங்கினார். வருகிற 31-ந் தேதிக்குள் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்கக்கோரி இந்த போராட்டம் நடைபெற்றது.
முன்னதாக சம்பத்துராயன் பேட்டை பிள்ளையார் கோவில் வளாகத்தில் இருந்து பெரிய தெரு வழியாக ஊர்வலமாக சென்று சம்பத்துராயன் பேட்டை தபால் நிலையத்தில் இருந்து தமிழக முதல்-அமைச்சருக்கும், மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவருக்கும் தபால் அனுப்பிவைத்தனர். இதில் பாஸ்கர், பெருமாள், வேலு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.